கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 100 வருட ங்களுக்கு முன்பு சுமார் 1220 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது பஞ்சப்பட்டி ஏரி. இந்த ஏரியின் கொள்ளளவு 198.80 அடியாகவும், 44 அடி உயரம் உள்ள இந்த ஏரிக்கரையின் நீளம் 2050 மீட்டராக உள்ளது.
மேலும் இந்த ஏரியைச் சுற்றி ஒத்தபட்டி, கொட்டாம்பட்டி, வேலாயுதம் பாளையம், பஞ்சபட்டி, அழகாபுரி உள்ளிட்ட 75 கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை என முப்போகம் விவசாயம் நடைபெற்றது.

No comments:
Post a Comment